ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் அதற்கு அடுத்த படியை ரஜினி தாண்டவில்லை. மேலும் அவ்வப்போது ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கிறாரே ஒழிய கட்சி ஆரம்பிக்கும் முயற்சி எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
ஆனால் கமல் திடீரென கட்சி தொடங்கிவிட்டார். இதனால் கொஞ்சம் ரஜினி ஆடிப்போயிருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக சன் குழுமம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2.O மற்றும் காலா வை தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினி சினிமாவில் ஆர்வம் காட்டி வருவதால் அரசியலுக்கு வருவது தற்போது ரசிகர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.