பிரதமர் மோடி இன்று சென்னை வருகை!

பிப்ரவரி 24, 2018 602

சென்னை(24 பிப் 2018): பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அப்போது மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் தமிழக அரசு திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

இன்று சென்னை வரும் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். விமான நிலையத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் காமராஜர் சாலையில் உள்ள ஐ.என்.எஸ். ஹெலிகாப்டர் தளத்துக்கு மோடி செல்கிறார். இதன்பிறகு கார் மூலம் கலைவாணர் அரங்கத்துக்கு செல்கிறார். கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மோடி செல்கிறார். இரவு அங்கேயே தங்குகிறார்.

பிறகு நாளை தனி விமானத்தில் புதுச்சேரி செல்கிறார். அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆரோவில் பொன் விழாவை துவக்கி வைக்கிறார். பின்னர், பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசுகிறார். கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்துக்கு வரும் அவர், தனி விமானம் மூலம் சூரத்துக்குச் செல்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...