இனி என்னை வேறமாதிரி பார்ப்பீர்கள் - டி.ஆர்.அதிரடி!

பிப்ரவரி 24, 2018 627

சென்னை(24 பிப் 2018): வரும் 28 ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளதாக டி.ரஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்தர், "சிலம்பரசனை ஒழித்துக் கட்ட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர், சிம்புவின் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட தயாரிப்பாளர் சங்கம் கட்டபஞ்சாயத்து செய்கின்றனர். அனைத்தையும் மீறி சிலம்பரசன் வெற்றி பெறுவார்.

நான் சிம்புவிற்கு பாதர் என்றால் சிம்பு ரசிகர்களுக்கு காட் பாதர் என்றும் டி. ராஜேந்தர் கூறினார். வரும் 28ஆம் தேதியன்று முக்கிய முடிவு அறிவிப்பேன். இதுநாள் வரை என்னை சத்திரியனாக பார்த்தீர்கள், இனி சாணக்கியனாக பார்ப்பீர்கள்." என்று டி ராஜேந்தர் கூறினார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...