எடப்பாடி திறந்து வைத்தது ஜெயலலிதா சிலை இல்லையா?

February 24, 2018

சென்னை(24 பிப் 2018): ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி 7 அடி உயரத்தில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

இரட்டை விரலை உயர்த்தி காண்பிப்பது போன்று எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆனால் சிலை ஜெயலலிதாவைப்போல் இல்லை என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது. மேலும் சிலையை வடிவமைத்தவர் மீது அதிமுகவினர் மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் அபிமானிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சிலையை திறந்துவைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த கட்சியையும், அ.தி.மு.க. ஆட்சியையும் யாராலும் உடைக்க முடியாது. சிலர் சதி செய்தபோதும் கட்சியையும் ஆட்சியையும் உடைக்க முடியவில்லை. ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது எனக் கூறினார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!