சென்னை வந்தார் பிரதமர் மோடி!

February 24, 2018

சென்னை(24 பிப் 2018): சென்னையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடக்க விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கும் மோடி, அங்கு நடைபெறும் மரக்கன்று நடும் விழாவிலும் கலந்து கொண்டு மரக்கன்று நடுகிறார்.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!