மோடி பங்கேற்ற ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் தமிழிசைக்கு அனுமதி மறுப்பு!

பிப்ரவரி 24, 2018 680

சென்னை(24 பிப் 2018): சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்பு அவரை மட்டும் அனுமதித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவருடன் வந்த பாஜக பிரமுகர்களை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஓய்வெடுக்கும் பிரதமரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்பி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...