தலித் சிறுமி கூட்டு வன்புணர்வு - தாய் மகன் படுகொலை!

பிப்ரவரி 26, 2018 932

விழுப்புரம்(26 பிப் 2018): விழுப்புரம் அருகே தலித் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது தாய் மற்றும் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வேலம்புத்தூர் கிராமத்தில் கணவனை இழந்த 45 பெண் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரின் மற்ற 4 பிள்ளைகள் பெங்களூரு மற்றும திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் 4 பேரும் வெளியூர்களில் வேலை செய்து தாய்க்கு பணம் அனுப்பி வருகின்றனர்.

தாயுடன் வசிக்கும் 14 வயது சிறுமி டி தேவனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு மகன் வேலம்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி இவர்களது வீட்டின் கதவை உடைத்த வேறு சமூகத்தை சேர்ந்த கும்பல் விதவை பெண்ணையும் , அவரது சிறுமியையும் சரமாரியாக தாக்கியது. பின்னர் அங்கிருந்த 8 வயது சிறுவனை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவிட்டு தாயையும், சிறுமியையும் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டது.

இந்நிலையில் மறுநாள் காலையில் இவர்கள் 3 பேரும் வீட்டை விட்டு வெளியே வராததை கண்ட அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 8 வயது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. தாயும் மகளும் ரத்த வெள்ளத்தில் ஆடைகளின்றி இருந்ததை அடுத்து அவர்களை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாயும் மகனும் உயிரிழந்தனர். சிறுமி உயிருக்கு போராடி வருகிறார்.

இதுகுறித்த விசாரணையில் இவர்களின் குடும்பத்தினருக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை இச்சம்பவம் நடந்து 4 நாட்களாகியும் இதுவரை போலீஸார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...