சென்னை ரஷ்ய தூதரகம் முற்றுகை - தமுமுக அறிவிப்பு!

February 27, 2018

சென்னை(27 பிப் 2018): சிரியா மனித உரிமை மீறலை கண்டித்து தமுமுக ரஷ்ய தூதரக முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமுமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிரியாவில் நடைபெறும் மனிதஉரிமை மீறலை கண்டித்தும், அப்பாவி மக்களை கொன்று குவிக்க துணைநிற்கும் ரஷ்யாவை கண்டித்தும், மேலும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும்,  வருகிற புதன்கிழமை 28/02/2018 அன்று, தமுமுக சார்பில் ரஷ்ய தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றும் அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தமுமுக அழைப்பு விடுத்துள்ளது.

Search!