காதலிக்க மறுத்த மாணவி எரித்துக் கொலை!

பிப்ரவரி 27, 2018 872

மதுரை(27 பிப் 2018): மதுரையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ராதேவி (வயது14). 9-ம் வகுப்பு மாணவியான இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது26) என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். ஆனால் சித்ராதேவி பாலமுருகனின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் சித்ராதேவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயில் கருகிய மாணவி சித்ராதேவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சித்ராதேவி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

சித்ராதேவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது தொடர்பாக பாலமுருகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...