சண்டீகரில் தமிழக மருத்துவ ஆரய்ச்சி மாணவர் மர்ம மரணம்!

February 27, 2018

சண்டீகர்(27 பிப் 2018): சண்டிகரில், மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், பயின்ற கிருஷ்ணபிரசாத் என்ற தமிழக மாணவர் மர்மமான முறையில் மரணித்துள்ளார்.

தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் சண்டிகரில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான (PGIMER)-ல் மருத்துவ மேல் படிப்பு முதலாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் கிருஷ்ணபிரசாத் தங்கியிருந்த விடுதி அறையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து ராமேஸ்வரத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு இன்று காலையில் தகவல் கிடைத்துள்ளது.

கிருஷ்ண பிரசாத்தின் மரணம், அங்கும் பயிலும் பல தமிழக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், மாணவனின் உடற்கூறு ஆய்வு இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!