சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளுக்கு கேட்கவில்லையா - நடிகர் விவேக் உருக்கம்!

பிப்ரவரி 27, 2018

சென்னை(27 பிப் 2018): சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? யாருக்குமே இதயம் இல்லையா? என்று நடிகர் விவேக் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசப்படையினருக்கும் இடையே பல வருடங்களாக போர் நடந்து வரும் நிலையில் கடந்த ஒருவாரமாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா.வுக்கு கண் இல்லையா?இதை விவாதிக்க சர்வதேச நீதி அமைப்புகளுக்கு வாய் இல்லையா? இந்தக் கொடுமை தீர வழி இல்லையா? அன்று இலங்கை இன்று சிரியா! ஆக,யாருக்குமே இதயம் இல்லையா? துரதிஷ்டவசமாக நான் இதற்கு சாட்சியாக இருப்பதற்காக குற்ற உணர்வடைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!