சிரியா மனித உரிமை மீறலை எதிர்த்து இதஜ முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

பிப்ரவரி 27, 2018

சென்னை(27 பிப் 2018): சிரியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறலை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ரஷ்ய துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"சிரியாவில் நடைபெறும் மனிதஉரிமை மீறலை கண்டித்தும்,அப்பாவி மக்களை கொன்று குவிக்க துணைநிற்கும் ரஷ்யாவை கண்டித்தும்,போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும்,வருகிற வெள்ளிகிழமை 02/03/2018 அன்று,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரஷ்ய துணை தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும்." என தெரிவித்துள்ளார்..

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!