உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மரணம்!

February 28, 2018

சென்னை(28 பிப் 2018): உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்தார்.

கடந்த 1974ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ரத்னவேல் பாண்டியன் 1988 முதல் 1994ம் ஆண்டு வரை உச்ச நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றினார். கடந்த 2007ம் ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

இந்நிலையில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 89. அவரது உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அவரது மகன் சுப்பையா சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அ

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!