ரஷ்ய தூதரகம் முற்றுகை - ஜவாஹிருல்லா கைது!

பிப்ரவரி 28, 2018

சென்னை(28 பிப் 2018): சிரியாவில் மனித உரிமை மீறப்படுவதை எதிர்த்து தமுமுக சார்பில் நடத்தப்பட்ட ரஷ்ய தூதரக முற்றுகைப் போராட்டத்தில் மமக தலைவர் ஜவாஹிருல்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரியாவில் நடைபெற்று வரும் உள் நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசப்படைகளும், ரஷ்யப் படைகளும் அப்பாவி பொதுமக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் சுமார் 600 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவது காண்போரை கதற வைக்கிறது.

இந்நிலையில் சிரியாவில் அரங்கேற்றப்படும் மனித உரிமை மீறலை எதிர்த்து தமுமுக சார்பில் ரஷ்ய தூதரக முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மமக தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் மூத்த தலைவர் ஹைதர் அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!