பிரபல ரவுடிகள் சுட்டுக்கொலை - போலீஸ் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

மார்ச் 02, 2018 675

மதுரை(02 மார்ச் 2018): மதுரையில் போலீசார் வேண்டுமென்றே ரவுடிகளை சுட்டுக்கொன்றதாக ரவுடிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மதுரை அருகே உள்ள சிக்கந்தர் சாவடிப் பகுதியில் மாநகர காவல்துறை தனிப்படை போலீசார் ரவுடிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சில ரவுடிகள் தப்பி ஓடி உள்ளனர். சில ரவுடிகள் போலீசாரை தாக்கி உள்ளனர். போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் ரவுடிகள் மந்திரி (எ) இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் பலியானார்கள்.

இதையடுத்து இருவரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது.இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ரவுடிகளின் உறவினர்கள் போலீசார் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

போலீசார் திட்டமிட்டு இருவரையும் கொன்று விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.உறவினர்களை பிடித்து வைத்துக்கொண்டு இரண்டு பேரையும் சரணடையுமாறு போலீசார் வற்புறுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

2 ரவுடிகளும் சரணடைந்த பின்னரே உறவினர்களை போலீசார் விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறி திட்டமிட்டு இருவரையும் போலீசார் சுட்டுக்கொன்றுவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...