இதஜவின் ரஷ்ய துணைதூதரக முற்றுகைப் போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

மார்ச் 03, 2018

சென்னை(03 மார்ச் 2018): சிரியா மீது தொடர் தாக்குதல் நடத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா மற்றும் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ரஷ்ய துணைத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியது.

சிரியா எனும் கவின் மிகு தேசம் மீது பன்னாட்டு சூழ்ச்சிகளின் அடிப்படையில் 8 ஆண்டுகளாக தொடர் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் நடுக்கடலில் ரஷ்ய போர்க் கப்பலில் எல்லாவிதமான நவீன பாதுகாப்புடன் இருந்து கொண்டு கொடூர நரபலி ஆட்சியை நடத்தி வருகின்றார்.

தன் நாட்டு மக்களையே இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கொத்துக் கொத்தாக கொலை செய்யும் கொடூரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுகிறார்கள்.ஒரே நாளில் ரஷ்யாவின் சுகாய் விமானங்கள் மூலம் 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

ஒரே நாளில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து உண்ண உணவின்றி படுகாயமுற்று உயிருக்கு போராடி வருகின்றனர்.இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழந்தைகள்,பெண்கள்,இளைஞர்கள், முதியோர்கள் என கொலை செய்யப்பட்டு உள்ளனர்.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்தக் கொடூர செயலை செய்து வரும் பஷார் அல் ஆசாத்திற்கு அனைத்து வகையிலும் ரஷ்ய இராணுவம் பக்க பலமாக உள்ளது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது இராணுவம், போர்க் கப்பல்கள்,டாங்கிகள்,சுகாய் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதங்கள் அனைத்தையும் தாராளமாக வழங்கி மக்களை கொல்லும் மாபாதக கொடூர செயலுக்கு பக்க பலமாக உள்ளார்.

இதனை கண்டித்து நியாயவான்களும், நடுநிலையாளர்களும் முஸ்லிம் ஆண்கள்,பெண்கள் குழந்தைகளுடன் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு ரஷ்ய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு,கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தலைவர் எஸ்.எம். பாக்கர் கண்டன உரையாற்றினார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!