பெரியார் சிலையை உடைக்க அர்ஜுன் சம்பத் ஆதரவு!

மார்ச் 06, 2018 733

சென்னை (06 மார்ச் 2018): தந்தை பெரியார் சிலையை உடைக்க ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்துக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு நாளை தமிழகத்தில் பெரியார் சிலை என தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை உடைக்கப்படும் என எச் ராஜா கூறியதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார். எச்.ராஜா கருத்து வன்முறையை தூண்டாது என்றும் அர்ஜுன் சம்பத் டிவி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...