பாஜக அலுவலகம் மீது குண்டு வீசியது தொடர்பாக இருவர் கைது!

மார்ச் 07, 2018 584

கோவை (07 மார்ச் 2018): கோவையில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திரிபுராவில் பாஜகவினர் லெனின் சிலையை உடைத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருந்தார். இவரின் கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பாஜக தலைமையும் ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.

எச்.ராஜா டெலிட் செய்த ட்வீட் செய்தி

இந்நிலையில் கோவை பாஜக மாவட்ட அலுவலகம் மீது இன்று காலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர். தற்போது இது தொடர்பாக கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தபெதிக பாலன், மற்றும் சிங்கா நல்லூரைச் சேர்ந்த ஜீவானந்தம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...