திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பரிதாப மரணம்!

March 07, 2018

திருச்சி (08 மார்ச் 2018): திருச்சியில் போலீஸ் தாக்கியதில் 3 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியானார்.

திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் இன்று இரவு ஈடுபட்டனர். சரியாக மணி 07:30 க்கு தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

அவர்களின் வாகனத்தை சோதனையிட. போலீஸார் கைகாட்டியதில் தர்மராஜ் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டியுள்ளார், அபோது ஏட்டு காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்ததாக தெரிகிறது. இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜா பலத்த காயமடைந்தார்.

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் திருச்சி- தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனத்தை எட்டி உதைத்த ஏட்டு காமராஜ் தப்பியோடிவிட்டார். இச்சம்பவத்தால் திருச்சி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!