முஹம்மது நபி குறித்து ஃபேஸ் புக்கில் தவறான பதிவு - பொதுமக்கள் போராட்டம்!

March 08, 2018

பாம்பன் (08 மார்ச் 2018): முஹம்மது நபி குறித்து ஃபேஸ் புக்கில் தவறாக பதிவிட்டவரை கைது செய்யக் கோரி பாம்பன் பாலத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாம்பன் பகுதியை சேர்த்த சதிஷ் என்பவர் ஃபேஸ் புக்கில் முஹம்மது பற்றி தவறாக பதிவிட்டுள்ளளார். அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்பு அவரை விடுதலை செய்துவிட்டனர்.

அவரை கைது செய்யக்கூறி பாம்பன் தரை பாலத்தில் 1000 மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டு உள்ளனர். பாம்பன் பாலத்தில் ஒரு மணிநேரமாக வாகனங்கள் செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!