போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு 10 லட்சம்: கமல் அறிவிப்பு!

மார்ச் 08, 2018 634

சென்னை( 08 மார்ச் 2018): திருச்சியில் போக்குவரத்து போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த உஷா குடும்பத்தினருக்கு நடிகர் கமல் ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் ரவுண்டானா அருகே போக்கு வரத்து போலீஸ் துரத்தி தாக்கியதில் கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணிப் பெண் உஷா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். ராயப்பேட்டை மக்கள் நீதி மய்ய மகளிர் தின விழாவில் கமல்ஹாசன் இதனை அறிவித்தார். தமிழக அரசு உஷாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் இழப்பீடு வழங்கி இருக்கிற நிலையில் கமல் 10 லட்சம் அறிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...