ஹெச்.ராஜாவை என்ன செய்யலாம்? - பாரதி ராஜா விளாசல்! (Video)

மார்ச் 08, 2018 762

சென்னை (08 மார்ச் 2018): பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவை ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்று கூடி , நாடு கடத்த வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் சிலையை தகர்க்க வேண்டும் என்று பதிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட ஹெச். ராஜாவுக்கு கடும் கண்டனங்கள் பலதரப்பில் இருந்தும் வந்து கொண்டு உள்ள நிலையில் இயக்குநர் பாரதி ராஜா ஹெச்.ராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழின துரோகி ஹெச்.ராஜா சாக்கடையில் ஒளிந்து கொண்டு இருக்கும் பெருச்சாளி, தன்னுடைய பதிவுக்கு மன்னிப்பு கேட்டிருப்பது ஒரு வேஷம். அது மனப்பூர்வமான மன்னிப்பு அல்ல. ஹெச்.ராஜாவை இனியும் தமிழகத்தில் நிலைக்க வைக்கக் கூடாது. எனவே நாகரீகமாக அனைவரும் கூடி நாடு கடத்த வேண்டும். இதனை அரசு செய்ய வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...