ஒருதலைக் காதல் எதிரொலி - கல்லூரி மாணவி குத்திக் கொலை!

மார்ச் 10, 2018 685

சென்னை (09 மார்ச் 2018): சென்னையில் கல்லூரி மாணவி கல்லூரி வாசலில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கேகே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த மாணவி அஸ்வினி. இவரை அழகேசன் என்பவன் பல நாட்களாக தொந்தரவு செய்து வந்திருக்கிறான். இதுகுறித்து அஸ்வினி ஏற்கனவே மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் கல்லூரி முடிந்து அஸ்வினி தோழிகளுடன் வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த அழகேசன் மாணவி அஸ்வினியை மறித்து பேசினார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்வினி மீது சராமாரியாக குத்தினான். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மாணவி அஸ்வினி ரத்த வெள்ளத்தில் கிழே சாய்ந்தார். அஸ்வினியை தனியார் மருத்துவமனையில் அங்கிருந்தவர்கள் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அஸ்வினி பலியானார்.

இதற்கிடையே மாணவியை கொன்று விட்டு தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...