ஹெச். ராஜாவுக்கு தடை!

மார்ச் 11, 2018 843

சென்னை (11 மார்ச் 2018): பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானங்களில் முக்கியமாக இனி எச்.ராஜாவை புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எச். ராஜா வன்முறையை தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்ததும், தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்றும் ஹெச். ராஜா கூறி தமிழக மக்களிடம் வாங்கி கட்டிக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...