கார் மீது லாரி மோதி 5 பேர் பலி!

மார்ச் 13, 2018

கிருஷ்ணகிரி (13 மார்ச் 2018): கிருஷ்ணகிரி அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அந்த காரை பின்தொடர்ந்து ஒரு லாரி வந்தது.

சிறிது நேரத்தில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், காரில் சென்ற ஒருவர், லாரியில் சென்ற ஒருவர் என 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு மீட்புப்படையினர் விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!