கமல் கட்சியில் தமிழிசை சவுந்திர ராஜன்?

மார்ச் 13, 2018

சென்னை (13 மார்ச் 2018): மக்கள் நீதி மய்யத்தில் சேர வேண்டும் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கமல் ஈ மெயில் அனுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தில் சேருமாறு தமிழிசை சவுந்திரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவருக்கு உறுப்பினர் அட்டையும் எண்ணும் வழங்கப் பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்தார். பாஜக தலைவருக்கு கமல் அழைப்பு விடுத்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!