அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

மார்ச் 15, 2018 634

சென்னை (15 மார்ச் 2018): உ.பி மற்றும் பீகார் இடைத் தேர்தல்களில் பாஜக வை வீழ்த்தியமைக்காக லாலு பிரசாத் யாதவ், மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் பதிவில், "மாபெரும் இடைத்தேர்தல் வெற்றிக்கு காரணமான அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் முக்கியமான மைல்கல்லாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது. ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற தன்மை ஆகியவையே என்றைக்கும் உயர்ந்தவை என்பதை பொது மக்கள் மீண்டும் நிரூபித்து உள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...