தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை சென்னையை சேர்ந்த ஒரு குழுவினர், ஈரோட்டைச் சேர்ந்த ஒரு குழுவினர் என மொத்தம் 36 பேர் ட்ரெக்கிங் சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மலையில் இருந்து இறங்கும்போது அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கினர். தமிழகத்தை அதிர்வுக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தில் நேற்று வரை 12 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கவுந்தபாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையை சேர்ந்த அனுவித்யா ஆகியோர் இன்று உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.