பெண் செய்தியாளரிடம் அமைச்சர் விஜய பாஸ்கர் பாலியல் சீண்டல் பேச்சு - VIDEO

மார்ச் 16, 2018 658

சென்னை (16 மார்ச் 2018): பெண் செய்தியாளரை பார்த்து அமைச்சர் விஜய பாஸ்கர், "நீங்க அழகா இருகீங்க" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், எம்.எல்.ஏ-க்கள் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டம் முடிந்து வெளியே வந்துள்ளார். அப்போது, டி.டி.வி.தினகரன் தொடங்கும் புதிய கட்சி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் விஜய பாஸ்கர் ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களது ஸ்பெக்ஸ் அழகாக உள்ளது’ என்று பேசினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பெண் செய்தியாளரிடம் பேசும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், `அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது கண்டிக்கத்தக்கது, ஓர் அமைச்சரே பெண் செய்தியாளரிடம் இப்படி நடந்தால், அதை முன்னுதாரணமாக எடுத்து கட்சிக்காரர்களோ மற்றவர்களோ நடக்க வாய்ப்பாக அமையும். அமைச்சர் விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுமுன் செய்தியாளர்கள் கூடுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...