அதிமுக நிர்வாகிகள் நியமனம் - ஓபிஎஸ் இபிஎஸ் அறிக்கை!

மார்ச் 17, 2018 673

சென்னை (17 மார்ச் 2018): அதிமுக அமைப்பு செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ராஜகண்ணப்பன்ஜே.சி.டி.பிரபாகர், மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், சண்முகநாதன், கோகுல இந்திரா, ஆதிராஜாராம், சோமசுந்தரம், சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், புத்திசந்திரன், முருகுமாறன் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக சிவபதியும் , இளைஞர் பாசறை செயலாளராக பரஞ்ஜோதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி - சையது கான்; வேலூர் கிழக்கு - ரவி; தஞ்சை வடக்கு - துரைக்கண்ணு; திருச்சி மாநகர் - குமார் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென் சென்னை - தி.நகர் சத்தியா; வட சென்னை வடக்கு (கிழக்கு) - ராஜேஷ்; வட சென்னை வடக்கு (மேற்கு) - வெங்கடேஷ் பாபு ஆகியோர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...