சென்னையில் முஸ்லிம் பெண்கள் நடத்திய அமைதிப் பேரணி!

மார்ச் 18, 2018 634

சென்னை (18 மார்ச் 2018): முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராக சென்னையில் முஸ்லிம் பெண்கள் அமைதி பேரணி நடத்தினர்.

ஆளும் மத்திய அரசு முத்தலாக் தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்ய முயன்று வருகிறது. ஏற்கனவே அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா தாக்கல் செய்யப் படாமல் உள்ளது. ஆனால் எப்படியும் இந்த தடை சட்டத்தை தாக்கல் செய்வோம் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த தடை சட்டத்திற்கு நாடெங்கும் கடும் எதிர்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் பெண்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னையில் முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பேரணி நேற்று (17-03-2018) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கையில் பதாகைகள் ஏந்தி அமைதியான வழியில் பேரணி நடத்தினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...