பத்ம விருது: அரசு பரிந்துரைத்த 6 பேரின் பெயர்கள் நிராகரிப்பு!

மார்ச் 18, 2018 574

புதுடெல்லி (18 மார்ச் 2018): பத்ம விருதுகளுக்கு தமிழக அரசால் பரிந்துரைக்கப் பட்ட 6 பேரின் பெயரை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

2018 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் ஜனவரி 25ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக மாநில அரசுகள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் இணையமைச்சர்கள் என விருதுக்கு 35,595 பரிந்துரைகளை வழங்கினர். இதிலிருந்து 84 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவர்கள் 10 பேர் கொண்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழகம் 6, பரிந்துரைகளை வழங்கியிருந்தது அவை மத்திய அரசால் நிராகரிக்கப் பட்டுள்ளது. அதேபோல, சில மாநில கவர்னர்கள் , மத்திய அமைச்சர்கள் ஜெட்லி, மேனகா , பிரகாஷ் ஜாவேத்கர், ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளும் ஏற்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...