இலங்கை துணை தூதரகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட சென்றதால் பரபரப்பு!

March 18, 2018

சென்னை (18 மார்ச் 2018): இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் துணை தூதரகத்தை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் துணை தூதரகத்தை முற்றுகையிட சென்றதால் பரபரப்புஇலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், ஆதித்தமிழர் விடுதலை இயக்க தலைவர் வினோத், தமிழர் நல பேரியக்க தலைவர் மு.களஞ்சியம் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது சீமான் நிருபர்களிடம் கூறுகையில், “இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் தாக்கப்பட்டது, ஈழத்தமிழர் படுகொலையின் தொடர்ச்சி ஆகும். இலங்கை ஒரு ஜனநாயக நாடு அல்ல, பவுத்த மத தீவிரவாத நாடு. தமிழருக்கு இலங்கையில் நிச்சயம் பாதுகாப்பு இல்லை. பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ் முஸ்லிம்கள் மீது சிங்கள அரசு தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் ஐ.நா. மன்றம் தலையிட்டு தீர்வு காணவேண்டும்’‘, என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களை வழிமறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் முயற்சி கைவிடப்பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!