ராமநாத புரத்தில் பயங்கரம் - பள்ளி ஆசிரியை கொலை!

மார்ச் 19, 2018 712

ராமநாதபுரம் (19 மார்ச் 2018): ராமநாத புரத்தில் பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேட்டில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியை சன்முகப் பிரியா. இவர் ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேட்டில் பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜா என்பவரின் மனைவியாவார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் சண்முகப்பிரியா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு சண்முகப்பிரியவின் உடலை அனுப்பி வைத்தனர். ஆசிரியை கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...