ஸ்ரீரங்கம் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் மரணம்!

March 19, 2018

சென்னை (19 மார்ச் 2018): திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 84.

உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஆண்டவன் சுவாமிகள் சிகிச்சை பலனின்றி பரமபதம் அடைந்தார் என்று ஆஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்தனர். ஜீயரின் உடல் சென்னையில் இருந்து இரவுக்குள் திருச்சிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!