கருணாஸ், தமிம் அன்சாரி, தனியரசு, அபூபக்கர் வெளிநடப்பு!

March 20, 2018

சென்னை (19 மார்ச் 2018): விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகிய எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தி, இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்தபின்னர் உறுப்பினர்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முற்பட்டனர்.

ஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. இதனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!