சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்!

மார்ச் 20, 2018 476

சென்னை (20 மார்ச் 2018): சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை தனியார் மருத்துவ மனையில் காலமானார்.

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் (வயது 75) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன்.

பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

நடராஜன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகராகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...