ரத யாத்திரையை பெரிது படுத்தியது எதிர் கட்சிகள்தான்: ஜெயக்குமார்!

மார்ச் 20, 2018 745

சென்னை (20 மார்ச் 2018): ரத யாத்திரையை பெரிதுபடுத்தி பரபரப்பாக்கியது எதிர் கட்சிகள்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்புகளை மீறி, நெல்லை, செங்கோட்டை வழியாக ரதயாத்திரை இன்று தமிழகத்திற்குள் நுழைந்தது ரதயாத்திரை. இந்நிலையில் ரதயாத்திரைக்கு எதிரான போராட்டத்திற்கு, 144 தடை உத்தரவுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

''கேரளா, மகாராஷ்டிரா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இந்த ரதயாத்திரை சென்றுவந்துள்ளது. அங்கு சென்றபோதெல்லாம் ஏன் இந்த ரதயாத்திரையை அனுமதித்தனர் என்ற கேள்வி கேட்கவில்லை. அவர்கள், அவர்கள் வழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது மட்டும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுகிறோம் எனச் சொல்வது ஏற்புடையதாக இல்லை. இது பெரியாரது மண், புரட்சித் தலைவர்களின் மண், ஜெயலலிதாவின் மண். அதனால், குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றுவதுபோல, ஒரு ரதம் வருவதால் யாரும் மாறப்போவது இல்லை. மக்களுக்குத் தெரியும், யாரை ஆதரிக்க வேண்டும் யாரை நிராகரிக்க வேண்டும் என்று." என்றார்.

மேலும் குறிப்பிட்ட குழு, யாத்திரைக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி, சட்ட ஒழுங்கைக் கெடுக்கும் முயற்சியைத் தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...