காவிரி விவகாரம் தொடர்பாக பதிலளிக்க ரஜினி மறுப்பு!

மார்ச் 20, 2018 601

சென்னை (20 மார்ச் 2018): காவிரி விவகாரம் தொடர்பாக பதிலளிக்க நடிகர் ரஜினி மறுத்து விட்டார்.

கடந்த வாரம் இமயமலை சென்ற ரஜினி பாஜக தொடர்பில் உள்ள சிலரைச் சந்தித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இந்நிலையில் சென்னை திரும்பிய ரஜினியிடம் பாஜக வுடன் தொடர்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, என் பின்னால் கடவுள் மற்றும் மக்களைத் தவிர வேறு யாரும் இல்லை எனப் பதிலளித்தார். மேலும், காவிரி விவகாரம் குறித்து பேசிய அவர், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தாமதமாகச் செயல்படுகிறது, இது தொடர்பாகத் தமிழக அரசு இன்னும் அழுத்தம் தர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

"காவிரி விவகாரத்தில் நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை எனக் கமல் கூறியிருக்கிறாரே... கமலின் கருத்துக்கு உங்களின் பதில் என்ன?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். "இதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை" என்றார் ரஜினி.

மேலும் தமிழகத்தில் ரத யாத்திரை மூலம் மதக் கலவரம் வராமல் அரசு பாதுகாக்க வேண்டும். மதக் கலவரத்துக்குத் தமிழகத்தில் இடமளிக்கக் கூடாது. பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயல் எனத் தெரிவித்தார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...