தனி ஒருவனாய் கெத்து காட்டும் தமிமுன் அன்சாரி!

மார்ச் 21, 2018 846

சென்னை (21 மார்ச் 2018): சமீப காலமாக சட்டசபையில் தனி ஒருவனாக உரிமைக்கு குரல் கொடுத்து வருகிறார் மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி.

தமிழக அரசின் பாதுகாப்புடன் எதிர்கட்சிகளின் போராட்டத்தையும் மீறி தமிழகத்தில் ரத யாத்திரை நேற்று நுழைந்தது. சட்ட சபையில் இது குறித்த கவன ஈர்ப்பு தீர்மாணத்தில் தமிமுன் அன்சாரி அரசை எதிர்த்து அவேசமாக எதிர்த்து குரல் கொடுத்தார். மேலும் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் வந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினே ஸ்தம்பித்து நிர்க்கும் அளவில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இந்நிலையில் தந்தை பெரியார் சிலை உடைக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் படம் இட்ட சட்டை அணிந்து சட்டப் பேரவைக்குள் நுழைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற போதும் தனி ஒருவனாய் தமிமுன் அன்சாரியின் அதிரடி எதிர்ப்பு நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிமுன் அன்சாரியின் எதிர்ப்பு குரலுக்கு பிற எம்.எல்.ஏக்களான தனியரசு, கருணாஸ் ஆகியோரும் ஆதரவு தெரிவிப்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...