சசிகலா புஷ்பாவின் திருமணத்தில் சிக்கல் - கணவரின் மனைவி புகார்!

மார்ச் 21, 2018 623

மதுரை (21 மார்ச் 2018): சசிகலா புஷ்பா இரண்டாவதாக திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதில் சிக்கல் எழுந்துள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் 2-வது திருமண செய்ய உள்ளதாக கூறப்படும் ராமசாமியின் மனைவி சத்தியபிரியா இது தொடர்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில் "சசிகலா புஷ்பா திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனக்கும் ராமசாமிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. எங்களுக்குள் சிறு பிரச்சனை ஆகி தனியாக வாழ்ந்து வருகிறேன். ஆனால் தொலை பேசியில் பேசி வருகிறோம். விவாகரத்து எதுவும் ஆகவில்லை. எனவே இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமி என்பவருக்கும் வரும் 26-ந் தேதி டெல்லியில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஆதாரமாக திருமண அழைப்பிதழும் சசிகலா புஷ்பாவின் மாஜி கணவர் லிங்கேஸ்வர திலகனிடம் இருந்து விவாகரத்து வாங்கிய பத்திரமும் வெளியானது. ஆனால், இந்தத் தகவலை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...