அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி!

மார்ச் 21, 2018 1091

திண்டுக்கல் (21 மார்ச் 2018): அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப் பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அதிமுக கொடிக் கம்பத்தில் இருந்த அதிமுக கொடியை இறக்கி விட்டு பாஜக கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதைக்கண்ட அப்பகுதி அதிமுகவினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பாஜக கொடியை இறக்கியுள்ளனர். அத்துடன் இதுதொடர்பாக போலீஸாரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கு பதிவு செய்துள்ள கீரனூர் போலீஸார், கொடியேற்றிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அதிமுக அரசை பாஜக தான் இயக்குகிறது என்ற குற்றச் சாட்டு இருந்து வருவதும், பிரதமர் மோடியின் வற்புறுத்தலின் பேரிலேயே மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்ததாக ஓ.பி.எஸ் கூறியிருந்ததும் நினைவு கூறத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...