சசிகலா விளக்கம் அளித்ததாக வெளியான தகவல் தவறானதாம்!

மார்ச் 21, 2018 561

சென்னை (21 மார்ச் 2018): ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா கூறியதாக வந்த தகவல் பொய்யானது என்று நீதிபதி ஆறுமுக சாமி விசாரணை கமிசன் மறுத்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் கடந்த 12–ந் தேதி சசிகலா பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். வேதா நிலையத்தில் மயங்கி விழுந்தது முதல் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மரணம் வரை ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன? என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தகவல்கள் ஊடகங்களில் வெளியானது.

ஆனால் நாளிதழ்களில் வெளியான தகவல்கள் தவறானது என்று நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...