BREAKING NEWS: சென்னை தங்க நிறுவனம் ஸ்டேட் வங்கியில் ரூ 824 கோடி மோசடி!

மார்ச் 22, 2018 722

சென்னை (22 மார்ச் 2018): பிரபல தங்க நிறுவனம் ஸ்டேட் வங்கியில் ரூ 824.15 கோடி மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னையை தலைமையகமாக கொண்ட கானிஷ்க் தங்க நிறுவனம் ஸ்டேட் வங்கியின் கீழ் இயங்கும் சுமார் 14 வங்கிகளில் ரூ. 824.15 கோடி மோசடி செய்ததாக ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, ரோடோமேக் பேனா நிறுவனம் போன்ற நிறுவனங்களின் பண மோசடி வரிசையில் தற்போது பிரபல தங்க நிறுவனமும் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...