ரத யாத்திரை போலீசாரால் தடுத்து நிறுத்தம்!

மார்ச் 22, 2018 830

ராமேஸ்வரம் (22 மார்ச் 2018): பல எதிர்ப்புகளையும் மீறி தமிழகத்தில் நுழைந்துள்ள ரத யாத்திரை, தூத்துக்குடி நோக்கி செல்லும் போது திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் இருந்து தொடங்கிய இந்த ரத யாத்திரை, நேற்று இரவு ராமேஸ்வரம் சென்றடைந்தது. ராமேஸ்வரத்தை தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த ரத யாத்திரை போலீசார் அனுமதி வழங்கியிருந்த ஈசிஆர் சாலையில் செல்லாமல் , திடீரென தேவிப்பட்டனம் சாலையில் சென்றதால் அதனை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

ஆனால் இதனை ரதத்தில் வரும் சாமியார் ஏற்க மறுத்து, நாங்கள் திட்டமிட்ட பாதையில் தான் செல்வோம் என பிடிவாதமாக இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், ரதத்துடன் வந்த பா.ஜ.க நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். திட்டமிட்ட பாதையில் சென்றால் பிரச்சினை ஏற்படலாம் என நிலைமையை எடுத்துக் கூறினர்.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து காவல்துறை கூறிய கிழக்கு கடற்கரை சாலையில், தூத்துக்குடி நோக்கி ரதத்தை கொண்டு செல்ல பா.ஜ.க. நிர்வாகிகள் சம்மதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...