2ஜி அவிழும் உண்மைகள்: நூல் வெளியீடு!

மார்ச் 22, 2018 876

சென்னை (22 மார்ச் 2018): 2ஜி வழக்கு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய '2ஜி அவிழும் உண்மைகள்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தி.மு.கவின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்துவந்தது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை கடந்த டிசம்பர் மாதம் சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில் 2ஜி அவிழும் உண்மைகள் என்ற நூலை திமுக முன்னாள் அமைச்சரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான ஆ.ராசா எழுதியிருந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, சுப.வீரபாண்டியன், இந்து குழுத்தின் தலைவர் ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...