கே.சி.பழனிசாமியுடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு!

மார்ச் 23, 2018 505

சென்னை (23 மார்ச் 2018): முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் கேசி பழனிசாமியை இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி மற்றும் தென்சென்னை மாவட்ட மருத்துவரணி செயலாளர் லாக்நகர் முஹம்மது யூசுப் ஆகியோர்,அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை நல்லிணக்க அடிப்படையில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதித்தனர்.

முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் போது திருக்குர்ஆன் அன்பளிப்பு செய்வதன் அடிப்படையில்,கே.சி.பழனிசாமிக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...