ஜெயலலிதா சிகிச்சையின்போது நடந்தது என்ன? :பிரதாப் ரெட்டி விளக்கம்

மார்ச் 23, 2018 671

சென்னை (23 மார்ச் 2018): அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருந்த பகுதியில் சிசிடிவி கேமராவை துரதிருஷ்டவசமாக நிறுத்தி வைத்திருந்தோம் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தது குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் பிரதாப்ரெட்டி சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா வீட்டில் இருந்து வரும்போதே அவரது உடல் நிலை மோமசமாக இருந்தது. அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வெளிநாடுகளில் இருந்து டாக்டர்களை வரவழைத்து உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை தேறியது. அதன் பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. தீடீரென அவர்களுக்கு மாரைடைப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தர சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அப்போலோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை அளித்தனர்.

ஜெயலலிதாவுக்கு நாங்கள் தனிக்கவனம் செலுத்தி உயர்தர சிகிச்சை அளித்தோம். அவரை யார்-யார் சந்திக்க வந்தார்கள் என்பதை அவருடன் இருந்தவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அவர்கள் இருந்தவர்கள் சொன்னபடி டாக்டர்கள் அவரை சந்திக்க அனுமதித்தனர். எங்களால் முடிந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு அனைத்து விதமான உயர்தர சிகிச்சைகளை அளித்தோம். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமராக்களை நிறுத்தி வைத்திருந்தோம்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முழு விவரங்களையும் விசாரணை கமி‌ஷனில் தாக்கல் செய்து உள்ளோம். விசாரணை ஆணையம் இதுவரை எங்களை ஆஜராகும்படி எந்த சம்மனும் வரவில்லை. ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை அவருடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் . ஜெயலலிதா இருந்த வார்டுகளில் இருந்த நோயாளிகளை வேற வார்டுக்கு மாற்றி விட்டோம். அவருடைய நலன் கருதியே இது செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...