ரஜினி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா?

மார்ச் 24, 2018 489

சென்னை (23 மார்ச் 2018): ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கத்தை எதிர்த்து ரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் எம். தம்புராஜ் அவரது பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமையகத்திலிருந்து கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, மாநரக, நகர பொறுப்புகளை வகிக்கும் 146 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக முடிவெடுத்துள்ளனர்.

கட்சி ஆரம்பித்த சில தினங்களிலேயே கட்சிக்குள் இப்படி ஒரு குழப்பம் வரும் என்று ரஜினியே எதிர் பார்த்திருக்க மாட்டார். ஆனால் இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...