அப்பல்லோ சேர்மன் பிரதாப் ரெட்டி அப்பல்லோவில் அனுமதி!

மார்ச் 24, 2018 588

சென்னை (24 மார்ச் 2018): அப்பல்லோ சேர்மன் பிரதாப் ரெட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

நெஞ்சு வலியால் மயக்கமடைந்த பிரதாப் ரெட்டிக்கு இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு, முக்கிய பிரமுகர்களுக்கான வார்டு அறையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா-வுக்கு வழங்கப் பட்டு வந்த சிகிச்சை, சிசிடிவி நிறுத்தம் போன்ற ஜெ. மரணம் பற்றிய உண்மைகளை சமீபத்தில் பிரதாப் ரெட்டி பகிரங்கப் படுத்தி வந்தது குறிப்பிடத் தக்கது. (காண்க: ஜெயலலிதா சிகிச்சையின்போது நடந்தது என்ன? :பிரதாப் ரெட்டி விளக்கம்)

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...